• Phone: 8825455435
  • Email: djms1980@gmail.com

Diamond Jubilee

  • Home
  • Diamond Jubilee

வைரவிழா மேனிலைப்‌ பள்ளி - வரலாறு

கொங்குநாட்டில்‌ காளை மணி ஓசை, களத்து மணி நெல்‌ ஓசை, வாழைக்‌
குலை ஓசை, வஞ்சியர்கை வளை ஓசை என செந்நெல்‌, கன்னல்‌, கமுகு என ஒங்கி வளரும்‌
நகரம்தான்‌ கோபிசெட்டிபாளையம்‌. நகரின்‌ புகழ்‌ பெற்ற பள்ளி என்றால்‌ அது வைரவிழா
மேனிலைப்‌ பள்ளிதான்‌. வைரவிழா பள்ளி, இப்படியொரு வியப்புக்குரிய பெயரைக்‌ கொண்ட
பள்ளி நாட்டிலேயே இது ஒன்றுதான்‌.

1898-ல்‌ நம்‌ நாட்டை ஆட்சிபுரிந்த விக்டோரியாப்‌ பேரரசியாரின்‌ 60 ஆம்‌
ஆண்டு ஆட்சி நிறைவு நாடெங்கும்‌ வைரவிழாவாகக்‌ கொண்டாடப்பட்டது. அப்போது இப்‌
பள்ளி தொடங்கப்பட்டதால்‌ வைரவிழாப்‌ பள்ளி எனப்‌ பெயர்‌ பெற்றது. அப்போதைய கோவை
மாவட்ட ஆட்சியரின்‌ மனைவி திருமதி கம்மிங்‌ அம்மையாரால்‌ மார்ச்‌ 3, 1898ல்‌ இப்பள்ளிக்கு
அடிக்கல்‌ நாட்டப்பட்டது. பள்ளியானது 1958-ல்‌ வைரவிழாவையும்‌, 1973-ல்‌ பவள விழாவையும்‌,
1998-ல்‌ நூற்றாண்டு விழாவையும்‌ கொண்டாடியது.

பள்ளியின்‌ மேனாள்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌

கொங்கு நாட்டின்‌ மகாகவியும்‌, தமிழ்க்‌ கலைக்‌ களஞ்சியத்தை
உருவாக்கியவருமான திரு. பெரியசாமி தூரன்‌ அவர்கள்‌ இப்‌ பள்ளியில்‌ ஆசிரியராகப்‌
பணியாற்றியது வரலாற்றுச்‌ சிறப்புச்‌ செய்தியாகும்‌. வெண்மைப்‌ புரட்சியின்‌ தந்‌ைத
டாக்டர்‌.வி.குரியன்‌, சத்தீஷ்கர்‌ உயர்நீதி மன்ற முன்னாள்‌ நீதிபதி ஏ.எஸ்‌.வெங்கடாசலயூர்த்தி,
தமிழ்‌ மூதறிஞர்‌ பேராசிரியர்‌ கு.அருணாசலக்‌ கவுண்டர்‌ மற்றும்‌ அமெரிக்காவில்‌ செயல்படும்‌
தமிழ்நாடு பவுண்டேஷன்‌ அமைப்பின்‌ தலைவர்‌ டாக்டர்‌ பெருமாள்சாமி, தமிழ்நாடு முன்னாள்‌
சட்டசபைச்‌ செயலர்‌ சி.கே.குமாரசாமி, சென்னைப்‌ பல்கலைக்‌ கழக முன்னாள்‌ பதிவாளர்‌
சி.கே.குமாரசாமி) கோவை, பாரதியார்‌ பல்கலைக்‌ கழக முன்னாள்‌ பதிவாளர்‌
சிலம்பணன்‌,தற்போது மாவட்ட ஆட்சியராய்‌ சத்தீஸ்கர்‌ மாநிலத்தில்‌ தற்போது பணியாற்றிவரும்‌
திரு.தேவசேனாபதி ஐஏஎஸ்‌., திரு.எம்‌.ரங்கராஜன்‌ ஐபிஎஸ்‌., கப்பல்‌ படையில்‌ ஓய்வு பெற்ற
கர்னல்‌ சர்வோத்தம ராவ்‌ ஆகியோர்‌ இப்பள்ளியில்‌ படித்த முன்னாள்‌ மாணவர்கள்‌ என்பது
பெருமைக்குரிய செய்தி ஆகும்‌. மேலும்‌ பள்ளியில்‌ படித்த மேனாள்‌ மாணவர்கள்‌ பலர்‌ தற்போது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்‌ (1500) பணியாற்றி வருகிறார்கள்‌ என்பது மேலும்‌
சிறப்பு.

பள்ளிக்கு வருகை தந்த சான்றோர்கள்‌

புகழ்பெற்ற வைரவிழாப்‌ பள்ளிக்கு 1927-ல்‌ மகாத்மா காந்தியும்‌, 1949-ல்‌
நாமக்கல்‌ கவிஞரும்‌, 1951-ல்‌ நூலக அறிவியலின்‌ தந்‌ைத எஸ்‌.ஆர்‌.ரெங்கநாதனும்‌, அதே
ஆண்டில்‌ மைய அரசின்‌ முதல்‌ நிதி அமைச்சர்‌ டாக்டர்‌ ஆர்‌.கே. சண்முகமும்‌, 1956-ல்‌
வினோபா பாவேவும்‌, 1989-ல்‌ முன்னாள்‌ பாரதப்‌ பிரதர்‌ ராஜீவ்‌ காந்தியும்‌, பதினெண்கவனகர்‌
ராமய்யா பிள்ளை இருமுறையும்‌, அவரது மகன்‌ (பதினாறு கவனகர்‌) கனகசுப்புரத்தினம்‌
ஒருமுறையும்‌, 1991-ல்‌ டென்மார்க்‌ அறிஞர்‌ நோர்‌ கார்ட்டும்‌, 1994-ல்‌ குன்றக்குடி அடிகளாரும்‌
பள்ளிக்கு வருகை புரிந்து சிறப்பித்துள்ளார்கள்‌. 1998 ல்‌ மஉறாராட்டிர முன்னாள்‌ ஆளுநர்‌
பாரதரத்னா சி.சிப்பிரமணியம்‌ (பசுமைப்‌ புரட்சியின்‌ தந்த) 2001 மற்றும்‌ 2013 ல்‌
தமிழ்நாட்டின்‌ இயற்கை வேளாண்‌ விஞ்ஞானி நம்மாழ்வார்‌. 2001 ல்‌ பெங்களூர்‌ இயற்கை
வேளாண்‌ விஞ்ஞானி நாராயண ரெட்டி ஆகியோர்‌ வருகை புரிந்து சிறப்புரையாற்றி
உள்ளார்கள்‌.

வைரவிழா சார்ந்த பள்ளிகள்‌

பள்ளி நிர்வாகத்தின்‌ கீழ்‌ வைரவிழா மேனிலைப்‌ பள்ளி, வைரவிழா பதின்மப்‌
பள்ளி மற்றும்‌ வைரவிழா ஆரம்பப்பள்ளி ஆகியவை செயல்படுகின்றன. 1960-ல்‌ கோபி

பழனியம்மாள்‌ பெண்கள்‌ மேனிலைப்‌ பள்ளி தொடங்கவும்‌, 1972-ல்‌ கோபி கலை அறிவியல்‌

கல்லூரியும்‌ தொடங்கவும்‌ வித்திட்டது இந்த வைரவிழாப்‌ பள்ளிதான்‌.

வைரவிழா மேனிலைப்‌ பள்ளியானது 14 ஏக்கர்‌ நிலப்பரப்பில்‌ 1500
மாணவர்களும்‌, 70 க்கும்‌ மேற்பட்ட ஆசிரிய அலுவலர்களும்‌ பணியாற்றிவருகிறார்கள்‌ என்பது
கூடுதல்‌ தகவல்‌. நூற்றாண்டு விழாவையொட்டி ரூ 60 லட்சம்‌ செலவில்‌ நூற்றாண்டு விழாக்‌
கட்டடம்‌ கட்டப்பட்டு, நூற்றாண்டு விழா சிறப்பாகக்‌ கொண்டாடப்பட்டது. விழாவிற்கு
ஆன்றோர்களும்‌, சான்றோர்களும்‌ வருகைபுரிந்து சிறப்பித்தார்கள்‌. தற்போது பள்ளியானது
125ஆம்‌ ஆண்டில்‌ அடியெடுத்து வைத்துள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகள்‌

வைரவிழா மேனிலைப்‌ பள்ளியின்‌ மொத்த நிலப்பரப்பு 14 ஏக்கர்‌ ஆகும்‌.
இதில்‌ 2 கிணறுகள்‌ உண்டு. வகுப்பறைகளின்‌ எண்ணிக்கை 60. பசுமைக்‌ குடில்‌
நாற்றுப்பண்ணை, இயற்கை வேளாண்மை காய்கறித்‌ தோட்டம்‌, மூலிகைப்‌ பண்ணை, மண்புழு
உர அமைவிடம்‌ பள்ளியில்‌ நவீன மயமாக்கப்பட்ட எல்சிடி படக்காட்சி அரங்கம்‌, கணினி
சாதனங்கள்‌ (11 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு கணினிகளின்‌ எண்ணிக்கை 25 ) மற்றும்‌ நவீன
தொழில்‌ நுட்பத்துடன்‌ கூடிய வகுப்பறைக்‌ கட்டடங்கள்‌ உள்ளன. ஏடிஎல்‌(க11,) ஆய்வம்‌,
ஸ்மார்ட்‌ ($ரகார்‌ (1255) வகுப்பறைகளும்‌, புதுப்பிக்கப்பட்ட அறிவியல்‌ ஆய்வகங்கள்‌ 6-12
வகுப்புகள்‌ பயன்படும்‌ வகையில்‌ அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு
விளையாட்டுக்கென்று தனித்‌ தனி மைதானங்கள்‌ அமைக்கப்பட்டு பல்வேறு பயிற்சிகள்‌
அளிக்கப்படுகின்றன. இதன்‌ வாயிலாக விளையாட்டுப்‌ போட்டிகளில்‌ மாவட்ட மற்றும்‌
மண்டல அளவில்‌ பரிசுகளைப்‌ பெறுகிறார்கள்‌. பாரம்பரியம்‌ மிக்க இப்‌ பள்ளியில்‌ ஒவ்வொரு
ஆண்டும்‌ புதுப்புதுக்‌ கட்டடங்களும்‌ புதுப்பொழிவோடு கூடிய ஐந்து பூங்காக்களும்‌
பாராமரிக்கப்பட்டு வருகின்றன. பள்ளியில்‌ மழைநீர்‌ சேகரிப்புத்‌ தொட்டி, குடிநீர்‌ வசதி,
கழிப்பிடவசதி, கழிவு நீர்‌ வெளியேற சாக்கடை வசதிகள்‌ ஆகியவை முறையாக
அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

 

பள்ளியின்‌ தாளாளர்‌ டாக்டர்‌ கே.கே.தட்சிணாமூர்த்தி அவர்கள்‌ 2002 முதல்‌
வைரவிழாப்‌ பள்ளிகளின்‌ தாளாளராக செயல்பட்டு வருகிறார்‌. பள்ளித்‌ தளாளரின்‌
வழிகாட்டுதலின்‌ பேரில்‌ மேலை நாடுகளிலும்‌, பல்கலைக்‌ கழகங்களிலும்‌ இருப்பது
போன்று பல்வேறு அறிவியல்‌ தொழில்‌ நுட்பக்கல்வியை பள்ளியில்‌ புகுத்தி பல்வேறு
செயல்‌ திட்டங்களைச்‌ செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறார்‌. 2002க்குப்‌ பின்‌
வைரவிழா மேனிலைப்‌ பள்ளியில்‌ ரூ 25 லட்சம்‌ செலவில்‌ ஏஆர்‌ சோமசுந்தரம்‌ நினைவு
வகுப்பறைக்‌ (இரண்டு அடுக்கு) கட்டடங்கள்‌, வைரவிழா பதின்மப்‌ பள்ளிக்கு மூன்று
அடுக்கு வகுப்பறைக்‌ கட்டடங்கள்‌, வைரவிழா ஆரம்பப்பள்ளிக்கு இரண்டடுக்கு
வகுப்பறைக்‌ கட்டடங்கள்‌, ராசிபுரம்‌ சுப்பையர்‌ நினைவுக்‌ கட்டடத்தின்‌ மாடிப்பகுதியில்‌
மேலும்‌ ஒரு அடுக்கு கட்டடம்‌ என இவர்‌ முயற்சியால்‌ கட்டப்பட்ட கட்டடங்கள்‌ ஆகும்‌.

வைரவிழா மேனிலைப்‌ பள்ளியைப்‌ பற்றி தற்போது தலைமையாசிரியராகப்‌
பணியாற்றிவரும்‌ திரு.என்‌.எஸ்‌.ராதாகிருஷ்ணன்‌ அவர்கள்‌ கூறும்‌ போது வைரவிழா
மேனிலைப்‌ பள்ளியானது 14 ஏக்கர்‌ நிலப்பரப்பில்‌ 1300க்கும்‌ மேற்பட்ட மாணவர்களும்‌,
70க்கும்‌ மேற்பட்ட ஆசிரிய அலுவலர்களும்‌ பணியாற்றிவருகிறார்கள்‌ கடந்து இரண்டு
ஆண்டுகளில்‌ பள்ளியின்‌ தேர்ச்சி சதவிகிதம்‌ உயர்ந்துள்ளது, மாணவர்களுக்கு
பள்ளி இணைச்செயல்பாடுகளான யோகா, விளையாட்டு, மன்றச்‌ செயல்பாடுகள்‌
போன்றவற்றிற்கு முக்கியத்துவம்‌ கொடுக்கப்பட்டுவருகிறது. மாணவர்களின்‌ கல்வி
வளர்ச்சிக்காக ரூபாய்‌ இரண்டு லட்சம்‌ செலவில்‌ மேம்படுத்தப்பட்ட எல்சிடி வகுப்பறை
மற்றும்‌ ஸ்மார்ட்‌ (ராவார்‌ (1௨%) வகுப்பறைகள்‌ உருவாக்கப்பட்டுள்ளன. மேலும்‌ ஏடிஎல்‌
ஆய்வகம்‌ 2018ல்‌ துவக்கப்பட்டு மாணவர்களுக்கென தொழில்நுட்பத்துடன்கூடிய

பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும்‌ சுகாதாரத்தை மேம்படுத்த மாணவர்களுக்கு
சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர்‌ வழங்கப்படுகிறது.

2022-23 ம்‌ கல்வியாண்டில்‌ 10 ம்‌ வகுப்பில்‌ 95 சதவிகிதமும்‌ 11ம்‌ வகுப்பு பொதுத்‌
தேர்வில்‌ 99 சதவிகிதமும்‌ 12ம்‌ வகுப்பு பொதுத்தேர்வில்‌ 100 சதவிகிதமும்‌ பெற்று பள்ளி,
வரலாற்றுச்சாதனை படைத்துள்ளது.

சேவை இயக்கங்கள்‌

பள்ளியில்‌ தேசிய மாணவர்‌ படை, நாட்டு நலப்பணித்திட்டம்‌, சாரணர்‌ இயக்கம்‌,
தேசிய பசுமைப்‌ படை, இளைஞர்‌ செஞ்சுலுவைச்‌ சங்கம்‌, தொன்மை பாதுகாப்பு மன்றம்‌,
சாலை பாதுகாப்புப்‌ படை, நுகர்வோர்‌ மன்றம்‌, சுற்றுச்‌ சூழல்‌ மன்றம்‌ ஆகியவை சூழல்‌
பணிகளைச்‌ செவ்வனே செய்து வருகின்றன. பள்ளியில்‌ பிற அமைப்புகளான கோபி சுழற்‌
சங்கம்‌, ஒய்ஸ்மென்‌ சங்கம்‌, நுகர்வோர்‌ பாதுகாப்பு மன்றம்‌ போன்றவை வாரந்தோறும்‌
பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகின்றன.

சூழல்‌ பணிகள்‌

பள்ளியானது சுற்றுச்சூழல்‌ பணிகளில்‌ சிறந்து விளங்குகிறது. பள்ளி நாற்றுப்‌
பண்ணையில்‌ ஆண்டுக்கு 2000 மரக்கன்றுகள்‌ உற்பத்தி செய்யப்பட்டு அருகில்‌ உள்ள
பள்ளிகள்‌ பற்றும்‌ சேவை அமைப்புகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
மாணவர்களுக்கு மரக்கன்றுகள்‌ உற்பத்தி, காளான்‌ வளர்ப்பு, மண்புழு உரம்‌ தயாரித்தல்‌ களப்‌
பயணம்‌ போன்றவற்றை ஒவ்வொரு ஆண்டும்‌ கொடுத்து வருகிறது. மேலும்‌ சுற்றுச்‌ சூழல்‌
கண்காட்சிகளில்‌ மாவட்ட, மாநில மற்றும்‌ தென்னிந்திய அளவில்‌ பல்வேறு பரிசுகளைப்‌
பெற்றுள்ளது. 1996 ஆம்‌ ஆண்டு வைரவிழாப்‌ பள்ளி சுற்றுச்‌ சூழலில்‌ மாவட்டத்திலேயே
சிறந்த பள்ளியாகத்‌ தேர்வு செய்யப்பட்டு பசுமைப்‌ பள்ளி விருதினைப்‌ பெற்றது. மேலும்‌
சுற்றுச்சூழல்‌ பேரணி, சைக்கிள்‌ பேரணி, சுற்றுச்சூழல்‌ கருத்தரங்குகள்‌, சுற்றுச்சூழல்‌ பயிற்சிப்‌
பட்டறை முதலிய நிகழ்வுகளை ஆண்டுதோறும்‌ பள்ளி நடத்தி வருகிறது.

ஆண்டுதோறும்‌ பள்ளியின்‌ சார்பாக சுற்றுச்சூழல்‌ குறித்த கவிதை நூல்கள்‌,
சுற்றுச்சூழல்‌ குறிப்புகள்‌, சுற்றுச்சூழல்‌ கையேடுகள்‌ வெளியிடப்படுகின்றன. பள்ளிப்‌
பணிகளுடன்‌ சேர்த்து பள்ளி மாணவர்கள்‌ பல்வேறு போட்டிகளிலும்‌ சுற்றுச்சூழல்‌
கண்காட்சிகளிலும்‌ மாவட்ட, மாநில அளவில்‌ அறிவியல்‌ கண்காட்சி, சுற்றுச்சூழல்‌
கண்காட்சி, கலைத்திருவிழா, ஓவியம்‌, கட்டுரை, வினாடி-வினா மற்றும்‌ பேச்சுப்‌ போட்டி
ஆகியவற்றில்‌ பல்வேறு பரிசுகளைப்‌ பெற்றுளார்கள்‌.

இவ்வாண்டு கலைத்திருவிழாப்‌ போட்டிகளில்‌, மாவட்ட அளவில்‌ 14
போட்டிகளில்‌ பள்ளி மாணவர்கள்‌ முதலிடம்‌ பெற்றுள்ளார்கள்‌. மேலும்‌ அவர்கள்‌
மாநிலஅளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்று பள்ளிக்குப்‌ பெருமை
சேர்த்துள்ளார்கள்‌. பள்ளி ஏடிஎல்‌ (&71.) ஆய்வகம்‌ சார்பாக மாவட்ட அளவில்‌ பல்வேறு
போட்டிகளில்‌ பரிசுகளைப்‌ பெற்றுள்ளார்கள்‌.

பிற செயல்பாடுகள்‌

நகரின்‌ முக்கியப்‌ பிரமுகர்களின்‌ நடைப்‌ பயிற்சி மையமாகவும்‌, குறு மைய,
ஊராட்சி, நகராட்சி, மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப்‌ போட்டிக்களுக்கான
சிறப்பு மையமாகவும்‌ பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில்‌ நாற்றுப்பண்ணை, ஐந்து
பூங்காக்கள்‌, விளையாட்டு உபகரணங்களுடன்‌ கூடிய மைதானம்‌, பசுமையான சூழலில்‌
250க்கும்‌ மேற்பட்ட பலன்‌ தரும்‌ மற்றும்‌ நிழல்‌ தரும்‌ மரங்கள்‌ உள்ளன.

பள்ளியில்‌ படித்த முன்னாள்‌ மாணவர்கள்‌ உள்நாட்டிலும்‌ வெளிநாட்டிலும்‌
பல்வேறு துறைகளில்‌ உயர்பதவி வகிக்கின்றனர்‌. பள்ளியில்‌ பழையமாணவர்கள்‌ சங்கம்‌,
முன்னாள்‌ மாணவர்கள்‌ அமைப்பு, முன்னாள்‌ மாணவர்‌ (1964) பேரவை முதலியவை இயங்கி
வருகின்றன.

மேலும்‌ மாணவர்களின்‌ முன்னேற்றத்திற்கு பள்ளி, தொலை நோக்குப்‌ பார்வையில்‌
செயல்பட்டு வருகிறது. பள்ளியானது எதிர்காலத்தில்‌ மேலும்‌ பல்வேறு சாதனைகளைப்‌

படைக்கும்‌ என்பதில்‌ சந்தேகமில்லை.

தலைமையாசிரியர்‌.